நண்பரின் பிறந்தநாள் கொண்டாடிய நண்பர்கள் விபத்தில் பலி.

நண்பரின் பிறந்தநாள் கொண்டாடிய நண்பர்கள் விபத்தில் பலி.
பொள்ளாச்சி: ஆனைமலையை அடுத்த வேட்டைக்காரன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (22). கூலி தொழிலாளி.இவரது நண்பரான வேட்டைக்காரன் புதூரைச் சேர்ந்த மணிகண்டனுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால், மாகாலிங்கமும் அவரது அண்ணன் சிவலிங்கம் மற்றும் மகாலிங்கத்தின் நண்பர் சுரேஷ் உள்ளிட்ட நண்பர்கள் வேட்டைக்காரன் புதூர் அருகே மணிகண்டனின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர். பின்பு இரு சக்கர வாகனத்தில் மகாலிங்கமும்,சுரேஷ் ஆனைமலையில் இருந்து சேத்துமடை செல்லும் சாலையில் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக சாலையின் பக்கவாட்டு சுவர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.இதில் தூக்கி வீசப்பட்ட மகாலிங்கம் மற்றும் சுரேஷ் ஆகியோரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story