மனைவியின் அந்தரங்க படம் - வாட்ஸ் ஆப்பில் பரப்பிய கணவன் மீது வழக்கு

மனைவியின் அந்தரங்க படம் - வாட்ஸ் ஆப்பில் பரப்பிய கணவன் மீது வழக்கு

காவல் நிலையம் 

மனைவியின் ஆபாச படங்களை வாட்சப்பில் பரவவிட்டதாக பிரான்சில் வசிக்கும் கணவன் மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை அருகே உள்ள திருச்சம்பள்ளியை சேர்ந்த அப்துல் அஜீஸ் மகன் முகமது எத்ரிஸ் என்பவர் நீடுரை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு இரட்டைப் பெண் குழந்தை பிறந்துள்ளது. வேலைக்காக முஹம்மது இத்ரீஸ் பிரான்ஸ் சென்றுள்ளார். தற்பொழுது கணவன் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அந்த பெண் தன் தாய் வீடான நீடூருக்கு வந்து விட்டார். இந்நிலையில் தன் கணவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தம்மை பழிவாங்கும் நோக்கில் தனது ஆபாச படங்களை வாட்ஸ் அப்பில் பரவிட்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் மகளிர் போலீசார் பிரான்சில் வேலை பார்த்து வரும் முகமது இத்ரிஸ் மீது பெண் வன்கொடுமை மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டப்படி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story