இருதரப்பினா் மோதல் – போலீசார் விசாரணை

இருதரப்பினரிடையே ஏற்பட்ட கைகலப்பால் 5 பேர் மீது வழக்குப்பதிவு

கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, புலியூர் ஓடமுடையார்பாளையம், கிழக்கு தெருவை சேர்ந்தவர் யோகலட்சுமி வயது 31. இவரது கணவர் ஆறுமுகம். ஆறுமுகம் டிசம்பர் 31ஆம் தேதி இரவு 11.30 மணி அளவில் அப்பகுதியில் உள்ள ஆற்றுப் படுகையில் பகுதியில் சென்ற போது, அதே பகுதியைச் சேர்ந்த குமரேசன் என்பவர், தன்னிச்சையாக சென்று ஆறுமுகத்தை தகாத வார்த்தை பேசி தகராறு செய்துள்ளார். இதனால் இருதரப்பினரிடையே வாய் வார்த்தை முற்றியதில் கோபமடைந்த குமரேசன், யோகலட்சுமி மற்றும் தர்ஷினி ஆகியோரை தகாத வார்த்தை பேசி கத்தியால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், இந்த சம்பவத்தில் இருதரப்பு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும் ஈடுபட்டு கைகலப்பில் இறங்கி உள்ளனர். இந்த சம்பவத்தில் யோகலட்சுமிக்கு மற்றும் 15 வயது சிறுமிக்கு காயம் ஏற்பட்டு சிறுமி கோவை, ராயல் கேர் மருத்துவமனையிலும், யோகலட்சுமி கரூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக யோகலட்சுமி அளித்த புகாரின் பேரில் குமரேசன் மீதும், மற்றொரு தரப்பு லட்சுமி அளித்த புகாரின் பேரில் ஆறுமுகம், யோகலட்சுமி உள்ளிட்ட நான்கு பேர் மீது பசுபதிபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்

Tags

Next Story