முன் விரோதம் காரணமாக இரு தரப்பினர் இடையே மோதல்.

முன் விரோதம் காரணமாக இரு தரப்பினர் இடையே மோதல். இரு தரப்பினர் அளித்த புகாரில் 5 பேர் மீது வழக்குப்பதிவு.
முன் விரோதம் காரணமாக இரு தரப்பினர் இடையே மோதல். இரு தரப்பினர் அளித்த புகாரில் 5 பேர் மீது வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, வடக்கு காந்திகிராமம், முத்து நகர், மூன்றாவது தெருவை சேர்ந்தவர் மாயவன் மகன் சஞ்சய் வயது 23. மாயவனுக்கும் , வடக்கு காந்திகிராமத்தைச் சேர்ந்த நவீன், முத்து நகர் இபி காலனியைச் சேர்ந்த சக்தி, அதே பகுதியை சேர்ந்த உதயகுமார் ஆகியோருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக டிசம்பர் 24ஆம் தேதி இரவு 9:30 மணி அளவில் சஞ்சய் வடக்கு காந்திகிராமம் பகுதியில் உள்ள பூபதி கவுன்சிலர் அலுவலகம் முன்பு வந்து, ஏற்கனவே உள்ள பிரச்சனை தொடர்பாக நவீன், சக்தி, உதயகுமார் ஆகியோரிடம் வினா எழுப்பி உள்ளார். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. இதில் ஒருவரை ஒருவர் கைகளாலும், பிளாஸ்டிக் சேராலும் தாக்கி கொண்டனர். இதில் சஞ்சய்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதேபோல உதயகுமார் மற்றும் முத்து நகர் பகுதியைச் சேர்ந்த ஹேமலதா என்பவருக்கும் உள் காயங்கள் ஏற்பட்டதால், இவர்கள் கரூர் ராஜ் ஆர்த்தோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அதேபோல சஞ்சய் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு, நவீன், சக்தி, உதயகுமார் ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதே சம்பவத்தில் உதயகுமார் அளித்த புகாரின் பேரில் மாயவன் மற்றும் சஞ்சய் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.

Tags

Next Story