மின்சாரம் தாக்கி விவசாயி பலி

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

மயிலாடுதுறை அருகே வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி பலி

மயிலாடுதுறை அருகே வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி பலி
மயிலாடுதுறை அருகே, ஆற்காடு கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன்(65) விவசாயி. இவர் நேற்று வயலுக்கு சென்றுள்ளார், நெற்பயிர்களுக்கு தண்ணீர் இல்லாததால், தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின்மோட்டாரை ஆன் செய்துள்ளார். அப்பொழுது மின்மோட்டார் கோளாறு ஏற்பட்டதை சரி சரிசெய்தபோது, மின்சாரம் தாக்கி அடிப்பட்டு கிடந்துள்ளார். அந்த வழியாக வயலில் புல்அறுக்க சென்ற, கிராம மக்கள் பார்த்து, மின்சாரத்தை துண்டித்து, லோகநாதனை பார்த்தபோது அவர் இறந்து விட்டது தெரிய வந்தது. மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். இறந்த லோகநாதனுக்கு, ஒரு மனைவியும் 2 மகன், 2 மகள் உள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story