கரூரில் பாலியல் வழக்கு குற்றவாளி குண்டாசில் கைது

கரூரில் பாலியல் வழக்கு குற்றவாளி குண்டாசில் கைது

மாவட்ட எஸ்பி அலுவலகம்

கரூரில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

கரூரில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சற்று முன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி, கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில், பாலியல் குற்ற செயலில் தொடர்புடைய குற்றவாளி செல்வராஜ் வயது 47 என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும்,இந்த வழக்கில் செல்வராஜ் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் பரிந்துரைத்ததன் பேரில், மாவட்ட ஆட்சியர் தங்கவேல் செல்வராஜ் மீது குண்டத்த தடுப்பு காவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதன் பேரில் செல்வராஜை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்த பெரும் நகர காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.

கரூர் மாவட்டத்தில் பெண்கள் மட்டும் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை தரும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் எச்சரித்துள்ளார்.

இதுபோன்ற சிக்கலில் ஆளாகும் குழந்தைகள் மற்றும் பெண்கள் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு மைய எண் 1098 அல்லது கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக எண் 94981 00780 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என ஆலோசனை வழங்கியுள்ளார். மேலும் குழந்தைகளை பாதுகாக்கவும், அவர்களை கண்காணிக்கவும் பெற்றோர்கள் தவறக் கூடாது எனவும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Tags

Next Story