இளைஞர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள்
தண்டனை விதிக்கப்பட்டவர்கள்
மயிலாடுதுறை அருகே பாலையூர் போலீஸ் சரகம் சின்னகொக்கூர் ஆர்ச் தெருவை சேர்ந்தவர் சரவணன்(22) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன், செல்வக்குமார் என்பவருக்குமிடையே15ஆம்தேதி முன்விரோதம் ஏக்ற்பட்டது. இந்த நிலையில் கடந்த 16.02.2020 இரவு வீட்டில் இருந்த சரவணனிடம் ராமச்சந்திரன், செந்தில்குமார், சிவக்குமார், ரஞ்சித் மீண்டும்; பிரச்னை செய்து சரவணனை தாக்கியுள்ளனர்.
அப்போது ராமச்சந்திரன், செந்தில்குமார் இருவரும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரவணனை குத்தியதில் படுகாயம் அடைந்தார்.அவரை இருசக்கர வாகனத்தில் வைத்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் சரவணன் இருந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து பாலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கலியன் மகன்கள் ராமச்சந்திரன்(31), செந்தில்குமார்(33), ஆடுதுறையை சேர்ந்த ராஜேந்திரன் மகன்கள் மாதவன்(37), ரஞ்சித்(34) ஆகியோரை கைது செய்தனர். இவ்வழக்கு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கு தொடர்பாக 19 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்ட நிலையில் நேற்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் ராமச்சந்திரன், செந்தில்குமார், மாதவன், ரஞ்சித் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தும் தலா ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்தும் அபராதம் கட்டதவறினால் மேலும் ஒரு மாதகால சிறை தண்டனை விதித்து நீதிபதி ராஜவேலு தீர்ப்பு வழங்கினார். அரசு தரப்பில் வக்கீல் ராமசேயோன் ஆஜரானார்.