மைக்ரோ ஃபைனான்ஸ் ஊழியர் கெடுபிடி - பெண் தூக்கிட்டு சாவு

மைக்ரோ ஃபைனான்ஸ் ஊழியர் கெடுபிடி -  பெண் தூக்கிட்டு சாவு

மாலதி 

மைக்ரோ ஃபைனான்ஸ் ஊழியரது கெடுபிடியால் பெண் தூக்கிட்டு சாவு தற்கொலைக்கு தூண்டியதாக நிதிநிறுவன ஊழியர்மீது வழக்கு பாய்ந்தது.

மயிலாடுதுறை அருகே உள்ள காளி கிராமத்தில் மலைக்குறவர் இனத்தை சேர்ந்த 60க்கும்மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். பெரும்பான்மையோர் கூலி வேலைக்கு சென்றுவருகின்றனர். கடுமையான உழைப்பாளிகள் என்பதால், மைக்ரோ நிதிநிறுவனத்தினர், போட்டி போட்டுக் கொண்டு கடனை வாரி, வழங்கி வசூல் செய்துவந்துள்ளனர். அதில் பாஸ்கர் மனைவி மாலதி(33) என்பவர், 5 நிதி, நிறுவனங்களிடம் கடன் பெற்று, குறித்த காலத்தில் தவணையை செலுத்திவந்துள்ளார்.

சென்ற வாரம் விட்டுவிட்டு பெய்த மழையால், கணவர் பாஸ்கரன் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது, 5ஆம் தேதி காலை, தவணைத்தொகையை கேட்டு தனியார் நிதிநிறுவனமான எல்அன்ட்டி நிறுவன ஊழியர் மாலதியிடம் தகராறு செய்துள்ளார். ஓரிரு தினங்களில் கட்டிவிடுகிறேன் என்று மாலதி கேட்டபோது, மாலை வருவேன், கண்டிப்பாக பணத்தை கொடுக்கவேண்டும் என்று கூறி சென்றனர்.

மாலை வந்து தவணையை கேட்டதுடன் ,பணம் வாங்காமல் செல்லமாட்டேன், என்று அடம்பிடித்தபடி ,நீண்டநேரம் வாசலில் நின்று தகராறு செய்துள்ளார், இதனால் விரக்தியடைந்த மாலதி, வீட்டிற்குள் ஓடிச் சென்று, புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது மூன்றரை வயது சிறுவன் வீட்டிற்குள் சென்று, அம்மாவோட கண்ணு, என்று அழுதுகொண்டே வெளியே வந்தான்.

இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்து, தூக்கில் தொங்கிய மாலதி உடலை கீழே இறக்கினர். இதைக் கண்ட நிதிநிறுவன ஊழியர், அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.இதுகுறித்து மணல்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, எல்அன்ட்டி நிதிநிறுவன ஊழியர்மீது, மாலதி தற்கொலைக்கு காரணமாக இருந்ததாக வழக்குப் பதிவுசெய்து அவரை தேடிவருகின்றனர்.

Tags

Next Story