தருமை ஆதீனம் ஆபாச வீடியோ: பாஜக அகோரத்திற்கு 1நாள் போலீஸ் காவல்

தருமை ஆதீனம் ஆபாச வீடியோ: பாஜக அகோரத்திற்கு 1நாள் போலீஸ் காவல்

பாஜக அகோரம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோக்களை வெளியிடப் போவதாக மிரட்டிய வழக்கில் சிறையில் உள்ள மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரத்தை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் 2நாள் அனுமதி அளித்துள்ளது.

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோ வெளியிடாமல் இருக்க கோடிகணக்கில் பணம் கேட்டு மிரட்டியும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தஞ்சை பாஜக மாவட்ட பொது செயலாளர் வினோத் திருவெண்காடு விக்கி ஸ்ரீநிவாஸ் ,

குடியரசு,செந்தில், ஜெயச்சந்திரன், விஜயகுமார், மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம் தருமபுர ஆதீன போட்டோகிராபர் பிரபாகரன் என , 9நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து 4பேர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். இதில் மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம், கந்த 15 ஆம் தேதி மும்பையில் கை செய்யப்பட்டு 16ம் தேதி மயிலாடுதுறை திருச்சம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

ஏற்கனவே 4பேரை போலீஸார் காவல் எடுத்து விசாரித்த போது தஞ்சை பாஜக வடக்கு மாவட்ட செயலாளர் வினோத் அரசு சாட்சியாக மாறினார். இந்நிலையில் மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரிடமிருந்து ஆதாரங்கள் மற்றும் சான்றுகளை கைப்பற்றுவதற்கு 5 நாட்கள் காவல் எடுத்து விசாரிக்க மயிலாடுதுறை போலீசார் நீதிமன்றத்தின் நாடினர் மயிலாடுதுறை நீட் நடுவர் நீதிமன்ற நீதிபதி விடுமுறை இருப்பதால் ,

செம்பனார் கோவில் திருச்செம்பள்ளியில் உள்ள தரங்கம்பாடி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி கண்மணி ஐந்து நாட்கள் போலீஸ் விசாரணைக்கு அனுமதி மறுத்தும் ஒரு நாள் மட்டும் அனுமதி அளித்தார், செவ்வாய்க்கிழமை மாலை 6:30 மணிக்கு போலீஸ் காவலில் அனுப்பி புதன்கிழமை மாலை 6:30 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உத்தரவிட்டிருந்தார்.

மயிலாடுதுறை போலீசார் பாஜக மாவட்ட தலைவர் அகோரத்தை அழைத்துச் சென்று மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தனர்.மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர். .

Tags

Next Story