சந்திக்க மறுத்த மனைவி - விரக்தியில் விஷம் குடித்து உயிரிழப்பு.

சந்திக்க மறுத்த மனைவி - விரக்தியில் விஷம் குடித்து உயிரிழப்பு.

சந்திக்க மறுத்து மனைவி திட்டியதால், விரக்தியில் கணவர் விஷம் குடித்த உயிரிழப்பு.

சந்திக்க மறுத்து மனைவி திட்டியதால், விரக்தியில் கணவர் விஷம் குடித்த உயிரிழப்பு.
கரூர் மாவட்டம் மன்மங்கலம் தாலுக்கா வாங்கல் அருகே உள்ள கே. வேலாயுதம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் மனைவி இந்திராணி வயது 45. மற்றொரு பெண்ணுடன் கொண்ட தகாத உறவால், குணசேகரன்- இந்திராணி ஆகிய இருவருக்கும் ஏற்பட்டு குடும்ப தகராறு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர். இதனிடையே, குணசேகரன் நவம்பர் 28ஆம் தேதி மதியம் 2 மணி அளவில், தனது மனைவி இந்திராணியை சந்திக்க, அவர் வீட்டுக்கு சென்று உள்ளார். இந்திராணி தனது கணவன் குணசேகனை சந்திக்க மறுத்ததோடு, திட்டியுள்ளார். இதனால் விரக்தி அடைந்த குணசேகரன், வாங்கல் காவிரி ஆற்று மயானப்பகுதியில், பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். சம்பவம் அறிந்த இந்திராணி, உடனடியாக குணசேகரனை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சையில் இருந்து வந்த குணசேகரன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து வாங்கல் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு, உயிரிழந்த குணசேகரன் உடலை உடல் கூறு ஆய்வுக்காக, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கு அனுப்பிவைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர் வாங்கல் காவல்துறையினர்.

Tags

Read MoreRead Less
Next Story