மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு.
மின்சாரம் தாக்கி அடையாளம் தெரியாத இளைஞன் உயிரிழப்பு. காவல்துறை விசாரணை.
அடையாளம் தெரியாத இளைஞன் மின்சாரம் தாக்கி உயிர் இழப்பு. காவல்துறை விசாரணை. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காம்புலியூர் ரவுண்டானா பகுதியில் செயல்படும், முத்து மெஸ் அருகே, டிசம்பர் 24ஆம் தேதி காலை 8 மணி அளவில், அப்பகுதியில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்த மனநலம் குன்றிய இளைஞன், திடீரென அப்பகுதியில் உள்ள மின் கம்பத்தில் ஏறி, மின் கம்பியை தொட்டு உள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி, தூக்கி வீசப்பட்ட இளைஞன் கீழே விழுந்ததில், தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்தில் துடி துடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு, கிராம நிர்வாக அலுவலர் சண்முகம், இது குறித்து கரூர் மாநகர காவல் துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கரூர் மாநகர காவல் துறையினர், உயிரிழந்த அடையாளம் தெரியாத இளைஞனின் உடலை மீட்டு, அடையாளம் காண்பதற்காக, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் இருப்பு வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, உயிரிழந்த அந்த இளைஞன் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கரூர் மாநகர காவல் துறையினர்.
Tags
Next Story