கஞ்சாவை பதுக்கி வைத்த நபர் கைது.
கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்திகிராமம் பகுதியில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. இதன் அருகாமையில் கஞ்சாவை விற்பனை செய்யும் நோக்கோடு பதுக்கி வைத்திருப்பதாக, காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் நவம்பர் 27ஆம் தேதி மதியம் 12 மணியளவில் அப்பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்டார். அப்போது, மருத்துவமனை அருகாமையில் உள்ள முள் தோட்டத்தில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக கஞ்சாவை பறிமுதல் செய்து, அதனை ஆய்வு செய்தபோது ரூபாய் 2000 மதிப்புள்ள 200 கிராம் கஞ்சா அதில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது, கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுக்கா, அரங்கநாதன் பேட்டை, நேருஜி நகரை சேர்ந்த ரவிக்குமார் வயது 48 என்பவர் இந்த குற்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், ரவிக்குமார் மீது வாங்கல், தாந்தோனிமலை, பசுபதிபாளையம் காவல் நிலையங்களில் ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. ரவிக்குமாரை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.