நீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலத்தை டிராக்டர் மூலம்.உழுது பயிர்கள் சேதம்
பயிர்களை சேதப்படுத்திய டிராக்டர்
,மயிலாடுதுறை அருகே மண க்குடி கிராமத்தில் தருமை ஆதீனம் கட்டுப்பாட்டில், உள்ள 4 மா, நிலத்தை .கோவிந்தசாமி பகுதிகட்டி விவசாயம் செய்துவந்துள்ளார். அவரது பேரன் ரவி, கடந்த 30 ஆண்டுகளாக சாகுபடி செய்துவருகிறார்.
தற்பொழுது நேரடி விதைப்பு மூலம் விவசாயம் நடைபெற்றுவருகிறது. ரவி தகப்பனாரின் 2ஆம் தாரமான அஞ்சம்மாள் சொத்தில் பங்கு கேட்டபோது, சித்தி அஞ்சம்மாளுக்கும் ரவிக்கும் சொத்துபற்றிய வழக்கு, மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், அஞ்சம்மாள் ஒட்டுமொத்த நிலத்தையும் கலயாணம் என்ற நபரிடம் விற்றுவிட்டதாகவும், அதை கையகப்படுத்த, தொடர்ந்து,தகராறு செய்துவந்துள்ளார்.
காலைநேரத்தில் கல்யாணம் என்பவர் டிராக்டர், 10க்கும்மேற்பட்ட அடியாட்களுடன் 2வீலரில் வந்து அத்துமீறி வயலுக்குள் புகுந்து அங்கே இருந்தவர்களை அடித்து வீரட்டிவிட்டு டிராக்டர்மூலம் விவசாயத்தை அழித்துள்ளனர், இதைகேட்ட ரவியின் மனைவி, மகனை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதுகுறித்த வீடியோ காட்சி வாட்சப்மூலம் வைரலாகிவருகிறது.
செம்பனார்கோவில் போலீசார், இரண்டுதரப்பார்மீதும், வழக்குப் பதிவுசெய்துள்ளது அநியாயம் என்றும், தன் வயலுக்குள் அத்துமீறிநுழைந்து தன் குடும்பத்தை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார்.