போக்குவரத்து தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த கோரி ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
காலம் வரையறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் அரசு போக்குவரத்து தொழிலாளர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க கோரி மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்.
தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்த கோரி தொழிலாளர்கள் காலவரையறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பனிப் பலன்கள் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம் பாட்டாளி தொழிற்சங்கம் பி எம் எஸ் ஆகிய தொழிற்சங்கங்களை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் மயிலாடுதுறை அரசுப்பேருந்து போக்குவரத்து பணிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நகர செயலாளர் செந்தமிழன் மற்றும் நாஞ்சில் கார்த்தி உட்பட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். உடனடியாக பேச்சுவார்த்தைக்கு அழைத்து கோரிக்கைகளை தீர்க்க முன்வர வேண்டும் என்று கூறியும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
Next Story