புல்லு கட்டு மோதியதால் இருதரப்பினர் இடையே தகராறு: வழக்கு பதிவு

புல்லு கட்டு மோதியதால் இருதரப்பினர் இடையே தகராறு: வழக்கு பதிவு

காவல் நிலையம் 

மாட்டுக்காக எடுத்துச் சென்ற புல்லு கட்டு மோதியதால் இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது.

கரூர் மாவட்டம், வாங்கல் காவல் எல்லைக்குட்பட்ட, நெரூர் வடபாகம், கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் கணபதி வயது 52 இவரது மனைவி அம்சவள்ளி வயது 46. அதே பகுதியில் வசித்து வருபவர் செங்குட்டுவன் வயது 52. இவரது மனைவி மற்றொரு அம்சவள்ளி. இவர்களது மகன் நெல்சன்.

இந்நிலையில் மார்ச் 4 ஆம் தேதி இரவு 8 மணி அளவில், கணபதி தனது மாட்டுக்கு தேவையான புல்லுகட்டை தலையில் சுமந்தவாறு இரு தரப்பினருக்கும் பொதுவான பாதையில் நடந்து சென்று உள்ளார். அப்போது செங்குட்டுவன் மனைவி அம்சவள்ளி தனது பேரனை பொதுப்பாதையில் குளிக்க வைத்து கொண்டு இருந்தார். இந்த நேரத்தில் கணபதி தூக்கிச் சென்ற புல்லு கட்டு மோதியதாக கூறப்படுகிறது.

இதனால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் எழுந்து தகராறு ஆக மாறியது. இந்த சம்பவம் தொடர்பாக கணபதி அளித்த புகாரின் பேரில்,சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக செங்குட்டுவன், அம்சவள்ளி, நெல்சன் ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர் வாங்கல் காவல்துறையினர்.

Tags

Next Story