பணம் வைத்து சூதாடிய நான்கு பேர் கைது

கோப்பு படம்
கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, பகுதிகளில் பணம் வைத்து சூதாடுவதாக பெண் காவல் உதவி ஆய்வாளர் பாரதிக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், மே 11ம் தேதி காலை 10 மணி அளவில்,கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது, மருத்துவமனை அருகே பணம் வைத்து சூது ஆடுவது கண்டறியப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட கரூர் மாவட்டம், பஞ்சப்பட்டி அருகே உள்ள வேலாயுதம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல், நல்லமுதம் பட்டி அருகே உள்ள பண்ணப்பட்டி பகுதியைச் சேர்ந்த தனபால், கரூர் வ உ சி தெருவை சேர்ந்த விஜயகுமார், கரூர் கருப்பாயி கோவில் தெருவை சேர்ந்த ஹரிஷ் ஆகியோரை கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 250யும் பறிமுதல் செய்தனர். பின்னர் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.