மின் கட்டண உயர்வை கண்டித்து பொள்ளாச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுச்சாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்..
திமுக ஆட்சியில் மின் கட்டண உயர்வால் தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களுக்கு இடம் பெயர்வு பொள்ளாச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுச்சாமி குற்றச்சாட்டு பேட்டி.. பொள்ளாச்சி..ஜூலை..23 தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வால் தொழில் நிறுவனங்கள், ஏழை எளிய மக்கள் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுகின்றனர் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. அப்போது மின் கட்டணம் உயர்வை கண்டித்தும் நியாய விலை கடைகளில் பாமாயில் பருப்பு பொருள்களை தட்டுப்பாடு இன்றி வழங்க வலியுறுத்தியும் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது இந்த ஆர்ப்பாட்டத்தில் கிணத்துக்கிடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் அதிமுக கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.. பின்னர் செய்தியாளர்களுக்கு எஸ்பி வேலுமணி அளித்த பேட்டியின் போது அதிமுக ஆட்சியில் கொரோனோ காலகட்டத்திலும் வருவாய் இழப்பு ஏற்பட்ட நிலையிலும் மின் கட்டணம், சொத்துவரி உயர்த்தப்படவில்லை திமுக ஆட்சி பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் தொடர்ந்து மின் கட்டணத்தை உயர்த்தப்பட்டுள்ளது கோவை மாவட்டம் உள்ளிட்ட தமிழகத்தில் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் மின் கட்டண உயர்வால் வேறு மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவே தமிழக அரசு மின் கட்டணம் உயர்வை ரத்து செய்ய வேண்டும் நியாய விலைக்கடைகளில் பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் தரமில்லாமல் குறைத்து வழங்கப்படுகிறது முழுமையாக அனைத்து பொருட்களும் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.. பேட்டி.. எஸ் பி வேலுமணி.. முன்னாள் அமைச்சர் அதிமுக.. ம.சக்திவேல்..பொள்ளாச்சி..9976761649.,
Next Story




