கார்கில்போர் வெற்றிவிழா ஓய்வுபெற்ற நீதிபதி மரக்கன்று நட்டு கொண்டாட்டம்
Mayiladuthurai King 24x7 |26 July 2024 2:19 PM GMT
மயிலாடுதுறை அருகே ஏவிசி அரசு உதவி பெறும் கல்லூரியில் கார்கில் போர் வெற்றி தினம் கொண்டாடம்
. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியை கடந்த 1999-ம் ஆண்டு ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முயற்சி செய்தது. இதனை நம் இந்திய ராணுவ வீரர்கள் தீரத்துடன் எதிர் கொண்டு முறியடித்தனர். இந்த போர் வெற்றி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கார்கில் வெற்றி தின 25-ம் ஆண்டு ஆகும். இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மன்னன்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் ஏவிசி கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இவ்விழாவை சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரியுமான கே. வெங்கட்ராமன் தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார். கல்லூரி முதல்வர் ஆர்.நாகராஜன், துணை முதல்வர் எம். மதிவாணன், டீன் எஸ். மயில்வாகனன் மற்றும் பல்வேறுதுறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு 50க்கும் மேற்ப்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.தேசிய மாணவர்படை அதிகாரி கேப்டன்.டாக்டர்.சி.பாலாஜி இவ்விழாவிற்கான ஏற்பாடு களை செய்திருந்தார். 90க்கும் மேற்ப்பட்ட தேசிய மாணவர்படை மாணவர்கள் பங்கேற்றனர்.
Next Story