ஒன்றிய அரசு நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசு நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காத செயலை கண்டித்து மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டம்
ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.  ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு ஒரு பைசா கூட ஒதுக்காத நிலையை கண்டித்து மயிலாடுதுறை மாவட்ட திமுகவினர் மயிலாடுதுறை கிட்டப்ப அங்காடி முன்பாக மயிலாடுதுறை நகர மன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர்கள் முன்னிலை வைத்தனர்,   ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் சிறப்புரையாற்றினார்.  எம்எல்ஏ பன்னீர்செல்வம், முன்னாள் எம்எல்ஏக்கள் சத்தியசீலன், குத்தாலம் கல்யாணம், ஜெகவீரபாண்டியன், குத்தாலம் அன்பழகன், டாக்டர் பன்னீர்செல்வம், அருள்செல்வன் உட்பட கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். ஏமாற்றாதே ஏமாற்றாதே தமிழக மக்களை ஏமாற்றாதே, எங்கள் வரிப்பணம் எங்கே போச்சு, தமிழ்நாட்டை வஞ்சிக்காதே வரி என்றால் இனிக்குதா நிதி என்றால் கசக்குதா, தமிழர்கள் நாங்கள் இந்தியர் இல்லையா, பதில் சொல் பதில் சொல் என்பது போன்ற முழக்கங்களை எழுப்பினர்
Next Story