ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பணியாற்றும் வனத்துறையினருக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது..
Pollachi King 24x7 |28 July 2024 9:51 AM GMT
ஆனைமலை புலிகள் காப்பகம் வனத்துறையினருக்கு வனச்சரக அலுவலகத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த முகாமில் வனச்சரகர் மணிகண்டன் உட்பட ஏராளமான வனத்துறையினர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்..
பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி மற்றும் உடுமலை அமராவதி என ஆறு வனச்சரங்கள் உள்ளன இந்த வனச்சரகங்களில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஏராளமான பணியாற்றி வருகின்றனர்.. இந்நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக்கோட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. உடுமலை வனச்சரக அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற இந்த மருத்துவ முகாம் கோவை மண்டல தலைமை வன பாதுகாவலரும் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனருமான ராமசுப்பிரமணியம் IFS, அவர்களின் அறிவுரையின்படியும், திருப்பூர் வனக்கோட்ட துணை இயக்குனர் தேவேந்திரகுமார் மீனா, மற்றும் உடுமலை வனச்சரகர் மணிகண்டன் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.. வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.. திருப்பூர் ரோட்டரி கிளப் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த முகாமில் திருப்பூர் ராம் மருத்துவமனை, உடுமலை ஆர்.வி. கண் மருத்துவமனை, ஹரிஷ் பல் மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்று வனத்துறையினருக்கு பரிசோதனை செய்தனர்.. மேலும் இந்த மருத்துவ முகாம் பணிகளை வனச்சரக அலுவலர் மணிகண்டன் கண்காணித்து வருகிறார்., ம.சக்திவேல்..பொள்ளாச்சி..9976761649.,
Next Story