ஓஎன்ஜிசிக்கு எதிராக ஒருங்கிணையும் போராட்டக்குழுவினர்
Mayiladuthurai King 24x7 |29 July 2024 12:26 PM GMT
மயிலாடுதுறையில் மாநில செயலாளர் நெல்லை முபாரக், மீத்தேன் ஜெயராமன், திருமுருகன் காந்தி சுப உதயகுமாரன் கூட்டாக பேட்டி. சூழலியலை பாதுகாப்பதாக கூறும் தமிழ்நாடு அரசு சூழலியல் பிரச்சனைகளை தடுக்கத் தவறினால் அனைத்து போராட்ட குழுவினரும் ஒருங்கிணைந்து போராடுவோம்
மயிலாடுதுறை அருகே தேரழுந்தூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ மாநில செயலாளர் நெல்லை முபாரக் பேட்டி:- மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரழுந்தூரில் நடைபெற்ற மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் சூழலியல் போராளி அத்திக்குர் ரஹ்மான் என்பவரின் திருமண விழாவில் எஸ்.டி.பி.ஐ, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு, மே 17 இயக்கம், பச்சைத் தமிழகம் உள்ளிட்ட மண் சார்ந்த பிரச்னைகளுக்காக போராடி வரும் சூழலியல் போராளிகள் ஒன்று கூடினர். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன், ஓஎன்ஜிசி பராமரிப்புப் பணி என்கிற பெயரில் பழைய எண்ணெய் கிணறுகளில் துரப்பன பணிகளை மேற்கொள்கிறது என குற்றம் சாட்டினார். தொடர்ந்து, எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறுகையில், காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தை இல்லாமல் ஆக்குகின்ற வகையில் மராமத்து என்ற பெயரில் புதிய பணிகளில் ஓஎன்ஜிசி ஈடுபட்டுள்ளதாக எங்களுக்கு சந்தேகம் உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் அமைச்சரவை இயங்கி வருகிறது. ஆனால் இத்தனை போராட்டங்களுக்குப் பிறகும் அவர் நேரிடையாக வந்த இந்த பகுதியில் பார்வையிடவில்லை. சூழலியலை பாதுகாப்பதாக கூறும் தமிழக அரசு ஓஎன்ஜிசி புதிய எண்ணெய் கிணறுகளை தடுத்து நிறுத்தத் தவறினால், ஜனநாயக சக்திகளை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம் என்றார். தொடர்ந்து பேசிய பச்சைத் தமிழகம் கட்சித் தலைவர் சுப.உதயகுமாரன் கூறுகையில், தமிழகத்தின் உணவுக்களஞ்சியமான டெல்டா பகுதி மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்குமான பாதிப்பு. கன்னியாகுமரியில் தற்போது கடல் பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை அம்பானி அதானி குழுமங்கள் மேற்கொள்ள உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தை போராடி தடுப்போம் என்றார்.
Next Story