மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் அ.சீனிவாசன் தலைமை தாங்கினார். நகர நிர்வாகிகள் மனோன்ராஜ், சர்புதீன், ஜெகதீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், ஒரு யூனிட்டுக்கு 20 பைசா முதல் 55 பைசா வரை உயர்த்தியதை வாபஸ் பெற வேண்டும். 400 யூனிட் வரை வீட்டு பயன்பாட்டு மின் கட்டணம் ரூ 4.60 ஆக இருந்ததை 20 பைசா உயர்த்தி ரூ.4.80 எனது உயர்த்தியதை உடனே திரும்ப பெற வேண்டும். ஏழை நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட தமிழக அரசின் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்த மின் கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ராமன், வீரராஜ், ராஜ்மோகன், கணபதி, நீதிசோழன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story



