நீதிமன்ற வளாகத்தில் பெண் காவல் ஆய்வாளரை மிரட்டிய தாதாக்கள் மீது வழக்கு
Mayiladuthurai King 24x7 |30 July 2024 2:45 PM GMT
மயிலாடுதுறை நீதிமன்றத்தில் மயிலாடுதுறை காவல்நிலைய பெண் காவல் ஆய்வாளரை ஒருமையில் திட்டி மிரட்டிய பிரபல தாதாக்களான வேலூர் மத்திய சிறைசாலை கைதி கபிரியேல் மற்றும் வெள்ளபள்ளம் வினோத் ஆகிய இருவர் மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு
. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி கபிரியேல் (52). பிரபல தாதாவான இவர்மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளது. ஆயுள் கைதியாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பூம்புகார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2012ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட திமுக பிரமுகர் முத்து ராஜேந்திரன் கொலை வழக்கு தொடர்பாக நேற்று வேலூர் மத்தியசிறையில் உள்ள கபிரியேலை போலீசார் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அப்போது அங்கு அதே வழக்கில் தொடர்புடைய மற்றொரு தாதாவான ரவுடி வெள்ளப்பள்ளம் வினோத்.40. ஆஜரானார். இருவரும் நீதிமன்றத்தில் ஒன்றாக நின்றுகொண்டு ரகசிய மாகபேசிக் கொள்வதை பார்த்த மயிலாடுதுறை காவல்நிலைய ஆய்வாளர் சுப்பிரியா, இருவரையும் எச்சரித்ததுடன், மேலும் பேசக்கூடாது என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரபல தாதாக்கள் இருவரும் காவல் ஆய்வாளர் சுப்ரியா வை ஒருமையில் திட்டி, மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து காவல் ஆய்வாளர் சுப்பிரியா மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ரவுடிகள் கபிரியேல், வெள்ளப்பள்ளம் வினோத் ஆகியோர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து, ஒருமையில் திட்டி மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு மணல்மேடு ரவுடி சங்கர் சிறையில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜராக வந்த பொழுது மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் மயிலாடுதுறை காவல் நிலைய ஆய்வாளர் சச்சிதானந்தம் என்பவரை மிரட்டிய போது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதற்கு பிறகு ரௌடிகள் போலீஸை நீதிமன்ற வளாகத்தில் மிரட்டியதால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Next Story