கோயிலுக்குள்ளிருந்து எரிந்த நிலையில் வெளியில் விழுந்ந ரோட்டரி சங்கத் தலைவர் உயிரிழப்பு
Mayiladuthurai King 24x7 |31 July 2024 5:58 AM GMT
தரங்கம்பாடியில் கடந்த 26ஆம் தேதி இரவு மாசிலாமணி நாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பொறையார் ரோட்டரி சங்கத் தலைவர் அருண்குமார் உடல்முழுவதும் காயங்களுடன் கோயில் வாசல் வந்து விழுந்துள்ளார். தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருண்குமார் உயிரிழப்பு
:- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே விநாயகர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார்(42). தரங்கம்பாடி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலரான அருண்குமார் வாடகை பாத்திர கடை நடத்தி வரும் இவர் ஜோசியமும் பார்த்து வந்தார். பொறையார் ரோட்டரி சங்கத் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். அருண்குமார் தரங்கம்பாடி கடற்கரையில் பழமை மிக்க மாசிலாமணி நாதர் கோவிலில் வெள்ளிக்கிழமை தோறும் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி இரவு கோவில் நடை சாத்தப்படும் நேரத்தில் அருண்குமார் கோவில் உள்ளே சென்று சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தபோது திடீரென்று மண்எண்ணை ஊற்றி எரிந்த நிலையில் கோயிலுக்கு வெயில் வந்து விழுந்தார், 65 சதவீதம் தீக்காயமடைந்த அருண்குமார் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்தார். தன் மீது யாரோ மண்ணெண்ணை ஊற்றி ஊத்தி தீ வைத்து விட்டு ஓடிவிட்டனர் என்றும் இதற்கு தன் கடை உரிமையாளர் ராஜ்குமார் தான் காரணம் என்றும் போலீஸிடம் அருண்குமார் புகார் தெரிவித்திருந்தார் பொறையார் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அருண்குமார் அளித்த தகவலின் பேரில் தரங்கம்பாடியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரை கைது செய்தனர். ராஜ்குமார் இடத்தில் வாடகை பாத்திர கடை மற்றும் ஜோசியம் தொழில் செய்து வரும் அருண்குமார் இடத்தை காலி செய்வது தொடர்பாக முன்விரோதம் இருந்ததாக கூறியதால் ராஜ்குமார் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கருதி அவரை கைது செய்து விசாரணையில் முகாந்திரம் எதுவும் இல்லாததால் ராஜ்குமாரை பொறையார் போலீசார் விடுவித்தனர். இந்நிலையில் நேற்று இரவு 8:30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அருண்குமார் உயிரிழந்தார். முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் பொறையார் போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
Next Story