கடலில் கலக்கும் காவிரி நீர் - காவிரி ஆற்றில் குழாய் தண்ணீர்

கடலில் கலக்கும் காவிரி நீர் - காவிரி ஆற்றில் குழாய் தண்ணீர்
கர்நாடகாவில் இருந்து காவிரியில் திறந்து விடப்பட்ட உபரி நீர் தமிழகத்தின் குலம் குட்டைகளுக்கு செல்லாமல் நேரடியாக கொள்ளிடம் ஆற்றின் மூலம் வங்க கடலை அடைந்தது ஆனால் ஆடிப்பெருக்கான சனிக்கிழமை காவிரியை வழிபட காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் குழாய் நீர் வசதி செய்து கொடுத்துள்ளனர்.
இந்த ஆண்டு பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்துஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கவில்லை . மேட்டூர் அணையில் 50 அடிக்குள் தண்ணீர் இருந்தால் தமிழக அரசு தண்ணீரை திறக்காமல் இருந்தது. இதற்கிடையில் பருவ மழை அதிக அளவில்கர்நாடகாவில் பெய்ததின் எதிரொலியாக அங்கு உள்ள அணைகள் நிரம்பி வழிந்து உபரி நீர் காவிரி ஆற்றில் சிறந்து விடப்பட்டது இதனால் மேட்டூர் அணை 120 அடியை தாண்டியது. அதிலிருந்து தமிழகத்திற்கு திக்ஷந்து விடப்பட்ட தண்ணீர் அதிக அளவில் வந்ததால் உடனடியாக தண்ணீரை கொள்ளிடம் ஆறு மூலம் வங்க கடலில் கலக்க விட தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன் அடிப்படையில் இன்று கொள்ளிடம் ஆற்றில் விடப்பட்ட காவிரி நீர் வங்க கடலுக்குள் சென்றது . நாளை நடைபெற உள்ள காவிரியை வரவேற்கும் விழாவான ஆடிப்பெருக்கன்று காவேரி ஆற்றில் தண்ணீர் இல்லை. மயிலாடுதுறை மாவட்டத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால், ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்படுகிறது. கொள்ளிடத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தள்ளி உள்ள காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லை . குளம் குட்டைகள் வறண்டு கிடைக்கிறது . ஆனால் கொள்ளிடத்தில் 80 ஆயிரம் கனஅடி நீர் தண்ணீர் சென்று கடலில் கலந்து வருகிறது. மயிலாடுதுறை துலா கட்டம் பிரசித்தி பெற்ற புண்ணிய இடமாக கருதப்படுகிறது அதில் ஆடிப்பெருக்கன்று பல்வேறு கிராம மக்கள் வந்து படையலிட்டு காவிரியை வழிபட்டு செல்வார்கள் அதனால் காவிரியில் தண்ணீர் இல்லாததால் மயிலாடுதுறை செய்தியாளர் நகராட்சி நிர்வாகம் போர்வெல் மூலம் தண்ணீரை துலா கட்டத்தில் உள்ள புஷ்கர குளத்தில் விட்டுள்ளது. இதில் ஆடிப்பெருக்கை பொதுமக்கள் கொண்டாட வசதி செய்யப்பட்டிருந்தாலும் காவிரி ஆற்றில் தண்ணீர் வராதது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அவசர அவசரமாக காவிரி நீரை கடலுக்குள் திறந்து விடும் பொழுது டெல்டா பகுதியில் உள்ள ஆறு குளம் குட்டைகளை நிரப்பிய பிறகு அனுப்பி இருந்தால் என்ன என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
Next Story