ஆடிப்பெருக்கை முன்னிட்டு சமத்தூர் முளை மாரியம்மன் கோவிலில் நேர்த்திக்கடன் செய்து தரிசனம் செய்த பக்தர்கள்..

ஆடிப்பெருக்கை முன்னிட்டு பொள்ளாச்சி அருகே உள்ள முளை மாரி அம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூவோடு எடுத்தும் மொட்டை அடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்..
ஆடிப்பெருக்கை முன்னிட்டு பொள்ளாச்சி அருகே உள்ள முளை மாரி அம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூவோடு எடுத்தும் மொட்டை அடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.. பொள்ளாச்சி.. ஆகஸ்ட்.03 பொள்ளாச்சி அடுத்துள்ள சமத்தூர் பகுதியில் பிரசித்தி பெற்ற முளை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் பகுதிகளில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம் அந்த வகையில் இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. இன்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக மொட்டை அடித்தும், பூவோடுகள் எடுத்தும் தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தும் அம்மனை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்., மேலும் கோவில் நிர்வாகம் மூலம் பக்தர்களின் கூட்ட நெரிசலை குறைக்க மற்றும் பாதுகாப்பு நலன் கருதி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது அதேபோல் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் போலீசார் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக அவசர மருத்துவ சேவைக்காக 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களும் அப்பகுதியில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.. ம.சக்திவேல்..பொள்ளாச்சி..9976761649.,
Next Story