மயிலாடுதுறையில் ஆறு புதிய பேருந்துகள் இயக்கம் புதிய பேருந்து கட்டுமான பணிகளை பார்வையிடல்
Mayiladuthurai King 24x7 |5 Aug 2024 11:34 AM GMT
மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தில் மூன்று புதிய பேருந்துகளையும் 3 புதிய கட்டுமான பேருந்துகள் என ஆறு பேருந்துகளை அமைச்சர்மேய்யநாதன் இயக்கி வைத்தார் மணக்குடியில் உருவாகும் ரூ. 24 கோடியில் 13 ஏக்கர் நிலத்தில் உருவாகும் புதிய பேருந்து நிலையப் பணிகளை பார்வையிட்டார்.
மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 3 புதிய பேருந்துகள், 3 புதிய கூண்டு கட்டமைக்கப்பட்ட பேருந்துகள் சேவையினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை பழையபேருந்து நிலையத்தில்; தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 3 புதிய பேருந்துகள், 3 புதிய கூண்டு கட்டமைக்கப்பட்ட பேருந்துகள் சேவையினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தஏ.பி.மகாபாரதி தலைமை தாங்கினார். பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் , சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பழைய பேருந்துகளுக்கு பதிலாக புதிய பேருந்துகள் சேவைகளை தொடங்கி வைத்தார். அதன் பிறகு மயிலாடுதுறைக்கு புதிதாக கட்டுப்பட்டு வரும் மணக்குடி புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை பார்வையிட்டார் . 13 ஏக்கர் நிலத்தில் ரூ.24கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை விரைவாக முடித்துக் கொடுக்க கேட்டுக்கொண்டார் மேலும் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தில் முதல் தளம் அமைப்பதற்கான வசதிகளை ஏற்படுத்தி தரவும் ஆலோசனை கூறினார் அவருடன் நகர் மன்ற தலைவர் குண்டா மணி செல்வராஜ் மாவட்ட ஊராட்சி தலைவி உம மகேஸ்வரி சங்கர் திமுக ஒன்றிய செயலாளர் மூவலூர் மூர்த்தி இமய நாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Next Story