உளுத்தக்குப்பையில் பதினெட்டாம்படி சங்கிலி கருப்பசாமி ஆலயத்தில் பால்குட விழா
Mayiladuthurai King 24x7 |5 Aug 2024 4:00 PM GMT
மயிலாடுதுறை அருகே உளுத்துக் குப்பையில் உள்ள அருள் மூவி ஸ்ரீ மகா பதினெட்டாம்படி சங்கிலி கருப்பசாமி ஆலயத்தின் 15 ஆம் ஆண்டாக நடைபெற்ற மகா பால்குட அபிஷேக ஆராதனை பெருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வேண்டுதல். கருப்பன்னசாமி, காளி ஆட்டங்களுடன் நடைபெற்றது
. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உளுத்துக் குப்பை கிராமத்தில் காவல் தெய்வங்களாக அருள் பாலித்து வரும் ஸ்ரீ மஹா முக்கன் ஈஸ்வரி காளிகாதேவி அம்மன், ஸ்ரீ மஹா பதினெட்டாம்படி சங்கிலி கருப்பசாமி ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தின் 15 ஆம் ஆண்டு ஆடி அமாவாசை பெருவிழாவை முன்னிட்டு மகா பால்குட அபிஷேக பெருவிழா இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு சிவன் கோவிலில் இருந்து சக்தி கரகம் புறப்பாடு செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து மேளதாளம், பம்பை உடுக்கை வாத்தியங்கள் முழங்க பச்சைக்காளி பவளக்காளி கருப்பன்னசாமி காளி ஆட்டங்களுடன் வெகு விமர்சையாக வீதி உலாவாக ஆலயம் வந்தடைந்தனர். நாட்டுப்புற பக்தி பாடல்கள் பாடி நடைபெற்ற காளி ஆட்டங்கள் பக்தர்களை விரைவாக கவர்ந்தது. வீடுகள் தோறும் சக்தி கரகத்திற்கு தீபாராதனை எடுத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். தொடர்ந்து ஸ்ரீ மஹாமுக்கன் ஈஸ்வரி காளிகாதேவி அம்மன் ஸ்ரீ மஹா பதினெட்டாம்படி சங்கிலி கருப்பன்ன சாமிக்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலால் அபிஷே ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ பதினெட்டாம் படி சங்கிலி கருப்பன்ன சாமிக்கு நேர்த்திக்கடன் பூஜையாக பக்தர்கள் பொங்கல் வைத்து கிடா, சேவல், குழந்தைகளுக்கு மூடி காணிக்கை செய்தனர். பின்னர் அன்னதானம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோயிலில் நடைபெற்ற அபிஷேக ஆராதனைகளை கண்டு தரிசனம் செய்தனர்.
Next Story