தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

X
மயிலாடுதுறை மாவட்டத்தில் பணிபுரியும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முதல் ஊராட்சி செயலர்கள் வரை உள்ள ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களின் பதவி உயர்வு, விருப்பத்தின் அடிப்படையில் பணியிட மாறுதல், மாத இறுதி நாளில் ஊதியம் உள்ளிட்டவற்றை நிறைவேற்றித் தர வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் நல்லமுத்து தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 100-க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
Next Story

