குடிக்க பணம் கொடுக்காத தந்தையை பீர்பாட்டிலால் குத்திய மகன் கைது

X
மயிலாடுதுறை திருஇந்தளூர் ஆடியாபிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வெற்றிவேல்(43). இவர் தவில் வாசித்து வருபவர். இவரது மகன் செல்வகுமார் (23 ).இவர் மயிலாடுதுறை பேருந்து நிலையம் பகுதியில் பூக்கட்டும் தொழில் பார்த்து வருகிறார். செல்வகுமார் தான் சம்பாதிக்கும் பணத்தை குடித்து செலவழித்து விட்டு வீட்டுக்கு வருவது வாடிக்கை, வீட்டிற்குவந்து தந்தையிடம் மேலும் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராரு செய்து வருவார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று மாலை வீட்டுக்கு குடிபோதையில் சென்ற செல்வகுமார், தன் தந்தை வெற்றிவேலிடம் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார், என்னிடம் பணம் இல்லை என்று அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார், இதனால் ஆத்திரம் அடைந்த செல்வகுமார், தான் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து தந்தையின் முதுகில் குத்தி விட்டு ஓடி விட்டார். காயம்பட்ட வெற்றி வேல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் . அவர் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகன் வழக்கு பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தார்.
Next Story

