பொள்ளாச்சி தொகுதியில் சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை..
Pollachi King 24x7 |9 Aug 2024 8:09 AM GMT
பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே ஈஸ்வர சாமி மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்து பொள்ளாச்சி தொகுதியில் சுரங்கப்பாதை, மேம்பாலம் மற்றும் சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு கோரிக்கை மனு அளித்தார்.,
பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட உடுமலை - பழனி சாலையில் பஞ்சாபி தாபா சந்திப்பில் புதிய கீழ்பாலம் (சுரங்கப்பாதை) அமைத்து தர வேண்டியும்,வேடபட்டி நால்ரோடு சந்திப்பு பகுதியில் மேம்பாலம் அமைக்கவும் மற்றும் பொள்ளாச்சி - உடுமலை நெடுஞ்சாலையில், அமுதசுரபி உணவகம் முதல் மரப்பேட்டை சந்திப்பு வரை, மெயின்ரோடு மற்றும் சர்வீஸ் ரோடு இடையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மீடியன்களை அகற்றுவது தொடர்பாகவும் பாராளுமன்றத்தில் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி அவர்கள், மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு.நிதின் கட்கரி அவர்களை சந்தித்து, இச்சாலை பிரச்சனைகளை எடுத்துரைத்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை மனுவை கொடுத்தார்.
Next Story