குத்தாலம் மகாகாளியம்மன் ஆலய பால்குட திருவிழா

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ஆடி வெள்ளியை முன்னிட்டு மஹா காளியம்மன் ஆலய பால்குட உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வில்லியநல்லூர் வடக்கு தெருவில் ஸ்ரீ மஹா காளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இருபதாம் ஆண்டு சக்தி கரகம் மற்றும் பால்குட உற்சவம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு அஞ்சலாற்றங்கரையில் இருந்து விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் மேல வாத்தியங்கள் முழங்க பால்குடம் மற்றும் கூண்டு காவடிகள் எடுத்து வந்தனர். மேலும் சக்தி கரகம் முன் செல்ல பக்தர்கள் பால்குடம் எடுத்த வந்த நிலையில் வழி நெடுகிலும் ஏராளமானோர் வழிபாடு மேற்கொண்டனர்.‌ இறுதியாக ஆலயத்தில் பக்தர்கள் கொண்டு வந்த பாலினைக் கொண்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story