வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பொள்ளாச்சி திமுக சார்பில் மருத்துவக் குழு அனுப்பி வைப்பு.,

பொள்ளாச்சியில் நகர திமுக சார்பில் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவக் குழு அனுப்பி வைத்தனர்.,
பொள்ளாச்சியில் நகர திமுக சார்பில் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவக் குழு அனுப்பி வைத்தனர்., கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் பெய்த கன மழை காரணமாக வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகள் அனைத்தும் நிலச்சரிவு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது இதில் 500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்., இந்த நிலையில் வயநாடு பகுதியில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொள்ளாச்சி நகர திமுக சார்பில் பொள்ளாச்சி நகராட்சி ஒன்பதாவது வார்டு உறுப்பினர் கலைவாணி கண்ணன் மகள் மருத்துவர் மீரா தலைமையிலான மருத்துவக் குழுவினர் இன்று வயநாடு பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்., பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருந்து, மாத்திரை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு செல்ல மருத்துவ குழுவினரை பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் சால்வை அணிவித்து அனுப்பி வைத்தனர்., மருத்துவர் குழுவினர் வாகனத்தை பொள்ளாச்சி நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன் கொடி அசைத்து அனுப்பி வைத்தார்.,
Next Story