பொள்ளாச்சி பிஏபி அலுவலகத்தில் கட்டிடப் பணிகளை அமைச்சர் மு பே.சாமிநாதன் ஆய்வு..
Pollachi King 24x7 |10 Aug 2024 3:58 PM GMT
தமிழ் வளர்ச்சித் துறையில் உதவி இயக்குனர் பணிகளுக்கு தமிழ் எம்.ஏ., பயின்ற 50 சதவீதம் பேருக்கு முன்னுரிமை வழங்கப்படும் - பொள்ளாச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தகவல்.,
தமிழ் வளர்ச்சித் துறையில் உதவி இயக்குனர் பணிகளுக்கு தமிழ் எம்.ஏ., பயின்ற 50 சதவீதம் பேருக்கு முன்னுரிமை வழங்கப்படும் - பொள்ளாச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தகவல் பொள்ளாச்சி.. ஆகஸ்ட்.,10 பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டம் செயல்படுத்த காரணமாக இருந்த முன்னாள் முதல்வர் காமராஜர், முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம், சட்டமன்ற உறுப்பினர்கள் V.K பழனிச்சாமி. N. மகாலிங்கம் உள்ளிட்டவர்கள் நினைவாக பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள கண்காணிப்பு பொறியாளர் அலுவலக வளாகத்தில் ரூபாய் 4 கோடியே 28 லட்சம் மதிப்பில் நினைவு மணிமண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது, இந்த பணிகளை செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்,அவருடன் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சாமி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்., பின்னர் அமைச்சர் மு. பெ சாமிநாதன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது., தமிழ் வளர்ச்சித் துறையில் தமிழில் எம்.ஏ., பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு டிஎன்பிசி மூலமாக உதவி இயக்குனர்கள் நியமனம் என்ற நடைமுறை இதுவரை இல்லை, தமிழ் எம்.ஏ., படித்தவர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டதன் அடிப்படையில் ஏற்கனவே தட்டச்சராக பொறுப்பேற்று அதன் பின் கண்காணிப்பாளராக பணியாற்றிய பின்பு உதவி இயக்குனராக பதவி உயர்வு வழங்கப்பட்டு பணியாற்றி கொண்டு இருக்கிறார்கள்.வரும் காலங்களில் 50 சதவீதம் தமிழ் எம்.ஏ. படித்தவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கும் அறிவிப்பு விரைவில் வெளியிடபடும் என்று தெரிவித்தார்.,
Next Story