மயிலாடுதுறையில் டிஎன்பிஸ்சி தேர்வுக்கு பயிற்சி கொடுக்கும் பயிற்றுனர்கள் தேர்வு

மயிலாடுதுறையில் டிஎன்பிஸ்சி தேர்வுக்கு பயிற்சி கொடுக்கும் பயிற்றுனர்கள் தேர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் நடத்த உள்ள குரூப் 2
மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும், வட்டம் வாயிலாக மதிப்பூதியத்தின் அடிப்படையில் பயிற்றுநர்களைக் கொண்டு, அவ்வப்போது மத்திய மற்றும் மாநில அரசுகளால் அறிவிக்கப்படும் போட்டித் தேர்வு வாயிலான காலி பணியிடங்களுக்கு பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகள் மற்றும் மாதிரி நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.   இந்நிலையில், தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட தொகுதி 2&2 ஏ தேர்விற்கு எதிர்வரும் 14.09.2024 அன்று முதல்நிலை எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. மேற்கண்ட எழுத்து தேர்விற்கு விண்ணப்பித்துள்ள இளைஞர்கள் பயனடையும் வகையில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த பயிற்றுநர்கள் தேர்வு குழு வாயிலாக தேர்ந்தெடுக்கப்படும் அனுபவமிக்க பயிற்றுநர்களை கொண்டு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்புகளில் பயிற்றுநராக தேர்ந்தெடுக்கப்படும் பயிற்றுநர்களுக்கு அரசு விதிகளுக்கு உட்பட்டு மதிப்பூதியம் வழங்கப்படும். பயிற்றுநர்கள் தினசரி பாடக்குறிப்புகள், பி.பி.டி., முந்தையாண்டு கேள்வித்தாள்கள், மாதிரி தேர்வு நடத்துவதற்கான கேள்வி, பதில்கள் ஆகியவற்றை தயார் செய்து வழங்க வேண்டும். தொடர்ந்து எதிர்வரும் 14.08.2024 புதன்கிழமையன்று காலை 11 மணிக்கு 2வது தெரு, பாலாஜி நகர், பூம்புகார் சாலை, மயிலாடுதுறை என்ற முகவரியில் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் போட்டித் தேர்வு பயிற்றுநர்களை தேர்வு செய்ய நேர்காணல் நடைபெற உள்ளது. எனவே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி 1, 2 போன்ற தேர்வுகளில் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மை தேர்வு எழுதிய அனுபவமிக்க இளைஞர்கள், இளைஞிகள் மேற்கண்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு பயிற்சி வகுப்பு நடத்த விருப்பம் இருப்பின் 9499055904 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு தங்களது சுயவிவர படிவம் அனுப்புவதோடு, நேர்காணல் நாளன்று நேரில் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.
Next Story