மயிலாடுதுறை சேந்தங்குடி மகாகாளியம்மன் ஆலய பால் குடவிழா

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற சேந்தங்குடி ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் 38 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற பால்குட திருவிழாவில் 100க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து அபிஷேகம் செய்து வழிபாடு:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சேந்தங்குடியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தில் 38 ஆண்டுகளுக்குப் பிறகு பால்குட அபிஷேகத் திருவிழா நடைபெற்றது. கடை ஞாயிறை முன்னிட்டு நடைபெற்ற பால்குட உற்சவத்தில் காவிரி கரையில் இருந்து சக்தி கரகம் மேலதாள வாத்தியங்கள் முழங்க பச்சைக்காளி பாவக்காய் ஆட்டத்துடன் புறப்பட்டது. இதில் விரதம் இருந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மஞ்சள் உடை உடுத்தி பால்குடம் சுமந்து சக்தி கரகத்துடன் வீதி உலாவாக ஆலயம் வந்தடைந்தனர். தொடர்ந்து ஆலயத்தில் ஸ்ரீ மகாகாளி அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
Next Story