போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி .

போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி .
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற  “போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில்  காணொலி காட்சி வாயிலாக மயிலாடுதுறை ஏ.வி.சி. பொறியியல் கல்லூரி மாவட்டஆட்சியர் .ஏ.பி.மகாபாரதி தலைமையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்
. தமிழ்நாடு முதலமைச்சர்  தலைமையில் நடைபெற்ற  “போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில்  காணொலி காட்சி வாயிலாக மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை ஏ.வி.சி. பொறியியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் , மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.கே.மீனா , மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் திருமதி.உமா மகேஸ்வரி சங்கர் , கூட்டாட்சி விஷ்ணு பிரியா நகர் மன்ற தலைவர் செல்வராஜ் உட்பட பல  கலந்து கொண்டு, விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.   மாவட்ட ஆட்சியர்  தெரிவிக்கையில்: தமிழ்நாடு அரசானது, போதைப்பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க பல்வேறு சீரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. அதன் காரணமாக, கடந்த சில வருடங்களாக சிகரெட் மற்றும் புகையிலை தொடர்பான விளம்பரங்கள் முற்றிலும் குறைக்கப்பட்டுள்ளது. போதைபழக்கம் உடலுக்கும், சமுதாயத்திற்கும் தீங்கு விளைவிக்கும். போதைப்பழக்கத்தினால் உடல்நலம் குன்றி, பல்வேறு நோய்கள் வரக்கூடும். உறவினர்கள் மற்றும் சமுதாயத்தில் மரியாதை இழக்கக்கூடும்.கல்வி மற்றும் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும்.  போதைப்பொருட்கள் உபயோகப்படுத்துவதோ, விற்பனை செய்வதோ தண்டனைக்குரிய குற்றமாகும். கடந்த மாதம் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டத்திற்குட்பட்ட காத்திருப்பு ஊராட்சி சம்பாநோடை கிராமத்தில போதைப்பொருட்கள் விற்கப்படுவதாக தொலைபேசி வாயிலாக புகார் பெறப்பட்டது. பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தொடர்புடைய கடைக்கு சீல் வைக்கப்பட்டு, கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். போதை பொருள் நடமாட்டம் குறித்து, தொலைபேசி எண்-1077, மற்றும் 7092255255 என்ற வாட்ஸ்சப் எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்
Next Story