பொள்ளாச்சியில் வணிகர் சங்கங்கள் சார்பில் முழு கடையடைப்பு போராட்டம்.,

பொள்ளாச்சி நகரப் பகுதிகளில் விதிகளை மீறி கட்டியதாக கூறி வணிக வளாகங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை கண்டித்து வணிகர் சங்கங்கள் சார்பில் கடை அடைப்பு போராட்டம்.,
பொள்ளாச்சி நகரப் பகுதிகளில் விதிகளை மீறி கட்டியதாக கூறி வணிக வளாகங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை கண்டித்து வணிகர் சங்கங்கள் சார்பில் கடை அடைப்பு போராட்டம் பொள்ளாச்சி -ஆகஸ்ட்- 13 பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட மகாலிங்கபுரம் மற்றும் புதிய திட்ட சாலை பகுதிகளில் வணிக பயன்பாட்டிற்கு அனுமதி பெறாமல் கட்டடங்கள் கட்டப்பட்டு இருப்பதாக கூறி பொள்ளாச்சி சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரித்த நீதிபதிகள் விதியை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைக்க பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது, இந்த உத்தரவையடுத்து கடந்த ஜூலை 11ஆம் தேதி விதிகளை மீறி கட்டப்பட்டதாக கூறபடும் கட்டடகளுக்கு பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகம் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து சீல் வைக்கும் நடவடிக்கை கண்டித்தும், இந்த செயல்களால் வணிகர்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் கூறி இன்று பொள்ளாச்சி நகரப் பகுதியில் வணிகர் சங்கங்கள் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. மகாலிங்கபுரம், புதிய திட்ட சாலை, கடைவீதி போன்ற பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டதால் அப்பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் வணிக வளாகங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை கைவிட வலியுறுத்தியும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும் ராஜேஸ்வரி திடல் பகுதிகளில் அனைத்து வியாபாரிகள் மற்றும் வணிக சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்., இதில் சிறு வியாபாரிகள் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றுள்ளனர்., மேலும் சீல் வைக்கும் நடவடிக்கையை கண்டித்து கோஷமும் எழுப்பினர் இந்த கடை அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவாக பொள்ளாச்சி நகரப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் இன்று ஒரு நாள் வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.,
Next Story