பல ஆண்டுகளாக சட்ட விரோதமாக செயல்படும் சவுடுமண் குவாரிகள்

மயிலாடுதுறைl மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்படும்  சவுடுமண் குவாரிகள். உரிமங்களை ரத்து செய்து நடவடிக்கை எடுக்க கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட் சமூக ஆர்வலர் ஒருவர் மனு வழங்கி கோரிக்கை விடுத்துள்ளார்
மயிலாடுதுறையை சேர்ந்த  பாரதிமோகன் என்பவர் மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்படும் சவுடு மண் என்ற பெயரில் செயல்படும் மணல் குவாரிகளின் உரிமங்களை ரத்து செய்யகோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலையிடம் மனு அளித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார். அவர் அளித்த மனுவில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கீழப்பெரும்பள்ளம், மேலப்பெரும்பள்ளம், கிடங்கல், சீர்காழி தாலுகா வானகிரி ஆகிய கிராமங்களில் சட்ட விரோதமாகவும், விதிகளுக்கு புறம்பாகவும்  சவுடு மண் குவாரிகள் இயங்கி வருகிறது. சவுடுமண் எடுப்பதற்கு தனிநபர்கள் பெயரில் குத்தகைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக போலியான போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட கிராமங்களில் இயங்கும் குவாரிகளில் 20 முதல் 25 அடி ஆழத்திற்கு மணல் எடுக்கப்பட்டு வருகிறது, நான்குவழிச்சாலை பணிகளுக்காக அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அனுமதி வழங்கப்பட்ட இடம் வேறு சவுடு மண் அள்ளும் இடம் வேறு, ஆனால் மேற்கண்ட குவாரிகளில் இருந்து சவுடுமண் மற்றும் மணல் எடுக்கப்பட்டு நாகை, கடலூர், காரைக்கால் மாவட்டங்களுக்கு தனிநபர்களுக்கு சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குத்தகைதாரர்கள் தாங்கள் பெற்ற குத்தகை ஒப்பந்த விதிகளையும், சட்டத்தையும் மீறி கனிமவளக்கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து உரிய ஆய்வு நடத்தி விதிமுறைகளை மீறி எடுக்கப்பட்ட மண்ணிற்கு உரிய அபராதத்தொகை வசூலித்தும் இதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story