தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம்

மயிலாடுதுறை அருகே ஆக்கூர், திருக்கடையூர் பகுதியில் தீ விபத்தில் கூரை வீடுகள் எரிந்து சேதமடைந்ததால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் நிவாரண பொருட்கள் வழங்கி ஆறுதல் கூறினார்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் ஆக்கூர், திருக்கடையூர் பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு கூரைவீடுகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. இதில், ஆக்கூர் ஊராட்சி காமராஜபுரம் தெருவை சேர்ந்த ஜவஹர் அலி என்பவரது வீட்டில் நேரிட்ட தீவிபத்தில் வீட்டிலிருந்த பீரோ, கட்டில் மற்றும் மின்சாதன பொருள்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதேபோல் திருக்கடையூர் மாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் ஸ்டாலின் என்பவரின் மனைவி இளம்பரிதி என்பவர் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் இவரது கூறை வீடு முற்றிலும் எரிந்து வீட்டிலிருந்த பொருட்கள் சேதம் அடைந்தது. பாதிக்கப்பட்ட இந்த இரண்டு குடும்பத்தினரையும்;, பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா எம்.முருகன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், தனது சொந்த நிதியில் 2 குடும்பத்தினருக்கும் தலா 10 ஆயிரமும், அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை உள்ளிட்ட நிவாரண பொருட்களையும் வங்கினார். அவருடன் திமுக மாவட்ட துணை செயலாளர் செல்வமணி, ஒன்றிய குழு துணை தலைவர் பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ், மாவட்ட திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் செந்தில் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Next Story