நண்பனிடம் மன்னிப்பு கேட்க வைத்து ஐடிஐ மாணவனை சகமானவன் தாக்கும் வீடியோ
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயம் மடவிளாகம் பகுதியில் ஐடிஐ படிக்கும் மாணவனை சக மாணவன் மற்றும் ஒரு இளைஞர் தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மாயூரநாதர் ஆலயம் மேலவீதியில் உள்ள தனியார் ஐடிஐ மாணவர்கள் என்று குறிப்பிடப்பட்ட அந்த வீடியோவில் சீருடை அணிந்த மாணவனை சக மாணவன் மற்றும் சீருடை அணியாத இளைஞர் ஒருவர் மாறி மாறி முகத்திலும் பிடரியிலும் தாக்கியவாறு வீடியோ காலில் உள்ள நண்பனிடம் மன்னிப்பு கேட்க வைத்து தொடர்ந்து தாக்குவதை வீடியோவாக எடுத்துள்ளனர். அடித்தது போதுமாக சிங்கம் இன்னும் அடிக்கவா எனக்கு பத்தலை என்று கூறியவாறு மாணவனை இருவர் தாக்கும் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை காவல் நியைத்திற்கு புகார் வரவில்லை என்றும் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Next Story





