மயிலாடுதுறையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
Mayiladuthurai King 24x7 |15 Aug 2024 8:59 AM GMT
மயிலாடுதுறை சாய் விளையாட்டு பயிற்சி மையத்தில் இந்திய நாட்டின் 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது மாவட்ட ஆட்சியர் கொடியேற்றி காவல்துறை அணிவது ஏற்றுக்கொண்டார் புதிய மாவட்ட காவல் கணிப்பு கண்காணிப்பாளர் ஜிஸ கலந்து கொண்டார்
இந்திய திருநாட்டின் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணையம் சாய் விளையாட்டு மைதானத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் முன்னிலையில் துப்பாக்கி ஏந்திய காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து தேசப்பற்று வலியுறுத்தி மூவர்ண நிறத்திலான பலூன்களையும் சமாதான புறாக்களையும் ஆட்சியர் மகாபாரதி தலைமையிலான அதிகாரிகள் மாணவர்கள் 6 வாரத்துடன் பறக்க விட்டனர். தொடர்ந்து காவல்துறை வருவாய்த்துறை உள்ளாட்சித் துறை போன்ற அரசு துறையில் சிறப்பாக பணியாற்றிய 481 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர் மகாபாரதி முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, வேளாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 500 பயனாளிகளுக்கு 14 கோடியே 35 லட்சத்து 24 ஆயிரத்து 479 ரூபாய் மதிப்பீட்டியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். பின்னர் மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதனை தொடர்ந்து கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட 950 மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story