ஆடி கடை வெள்ளி மயிலாடுதுறை பிரசன்ன மாரியம்மன் கோயில் பால்குடம்

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற வண்டிக்காரத்தெரு பிரசன்ன மாரியம்மன் ஆலயத்தில் ஆடி கடை வெள்ளியை முன்னிட்டு பால்குட உற்சவம் , பச்சைக்காளி மற்றும் கையில் அறிவால் ஏந்திய கருப்பசாமி நடனத்துடன் ஊர்வலமாக பக்தர்கள் சென்று வழிபாடு
மயிலாடுதுறை நகரில் வண்டிக்கார தெருவில் பிரசித்தி பெற்ற பிரசன்ன மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் ஆடி கடை வெள்ளியை முன்னிட்டு தரைக்கடை வியாபாரிகள் சார்பில் 42 ஆம் ஆண்டு பால்குட திருவிழா இன்று நடைபெற்றது. காவேரி ஆற்றங்கரையிலிருந்து மேளதாள வாத்தியங்கள் முழங்க பச்சைக்காளி , பவளக்காளி கையில் அரிவாள் ஏந்திய கருப்பசாமி ஆட்டத்துடன் வெகுவிமர்சையாக பால்குடம் வீதியுலா நடைபெற்றது. விரதம் இருந்த பக்தர்கள் ஏராளமானோர் பால்குடம் மற்றும் அலகு காவடி எடுத்து ஊர்வலமாக நகரின் முக்கிய வீதி வழியாக சென்று ஆலயத்தை அடைந்தனர். தொடர்ந்து பிரசன்ன மாரியம்மனுக்கு பக்தர்கள் எடுத்து வந்த பாலால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்ட நிலையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடாந்து கஞ்சிவார்த்தல்அன்னதானமும் நடைபெற்றது.
Next Story