கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்லும் லாரிகள் அதிவேகமாக இயக்கப்படுவதால் பொதுமக்கள் பாதிப்பு.,
Pollachi King 24x7 |16 Aug 2024 12:55 PM GMT
பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை வழியாக கேரளா செல்லும் கனிம வள வாகனங்கள் அதிவேகம் செல்வதால் விபத்து ஏற்படும் சூழ்நிலை, வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை.,
பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை வழியாக கேரளா செல்லும் கனிம வள வாகனங்கள் அதிவேகம் செல்வதால் விபத்து ஏற்படும் சூழ்நிலை, வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை., பொள்ளாச்சி.,ஆகஸ்ட்-16 பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான தனியாருக்கு சொந்தமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன., இந்த கல்குவாரிகளில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் செம்பனாதி, கோவிந்தாபுரம் நடுப்புணி,கோபாலபுரம் மீனாட்சிபுரம் வழியாக தினசரி நூற்றுக்கு மேற்பட்ட கனரக வாகனங்கள் கனிம வளங்களை கொண்டு செல்கிறது, மேலும் கிராமப்புறங்களில் வழியாக செல்வதால் சாலைகள் முற்றிலும் பழுதடைந்துள்ளது பேரூராட்சி,ஊராட்சி அளவில் உள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைகள் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்., மேலும் அதிவேகமாக போட்டி போட்டுக் கொண்டு கனரக வாகனங்கள் செல்லும் பொழுது வேகத்தடையில் ஏறி இறங்கும்போது கற்கள் கீழே விழுந்து விடுவதால் அடிக்கடி அந்த சாலைகளில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது., டிப்பர் லாரிகளில் கொண்டு செல்லும் கனிம வளங்கள் முறையாக தார்ப்பாய் போட்டு செல்லாமல் செல்வதால் தொடர் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது இதனால் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது இதை தடுக்கும் விதமாக ஆனைமலை காவல் நிலைய போலீசார்,பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அதிகாரிகள்,கனிமவள அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.,
Next Story