தமிழக வெற்றிக் கழக கொடி அறிமுக விழா வெடி வெடித்து கொண்டாட்டம்

தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியினை தலைவர் விஜய் அறிமுகப்படுத்திய நிலையில் மயிலாடுதுறையில் அக்கட்சி நிர்வாகிகள் வெடி வெடித்து பொதுமக்களிடம் கொடியினை அறிமுகப்படுத்தி இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியினை அறிமுகப்படுத்தி சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலைய செயலகத்தில் தலைவர் விஜய் கொடியை ஏற்றி வைத்து அதன் பாடலை வெளியிட்டார். இதன் மூலம் தமிழக வெற்றி கழகம் முழு அரசியல் கட்சி என்கின்ற வடிவத்தை பெற்றுள்ளது. மேலும் நட்சத்திரங்கள் கொண்ட , வட்டத்திற்குள் வாகை மலரும் , இரு பக்கங்களில் போர் யானை படமும் கட்சிக் கொடியில் இடம் பெற்றுள்ளது. இதனை கொண்டாடும் வகையில் மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் தவெக நிர்வாகிகள் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் கட்சிக் கொடியினை அறிமுகம் செய்து வருங்கால முதலமைச்சர் வாழ்க என நிர்வாகிகள் கோஷங்களை எழுப்பினர். இதில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்று கட்சி கொடியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
Next Story