நாகை நீதிமன்றத்தில் தப்பிய போக்சோ கைதி சென்னை உயர்நீதிமன்றத்தால் சிறை

மயிலாடுதுறை அருகே 2015ல் குத்தாலம் பகுதியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நாகை சிறப்பு நீதிமன்றம் இளைஞரை விடுதலை செய்துவிட்டது. மேல்முறையீட்டில், சென்னை உயர்நீதிமன்றம், 10 ஆண்டு சிறை விதித்து அதிரடி தீர்ப்பு. மயிலாடுதுறை போலீசுக்கு குவியும் பாராட்டுக்கள்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் சரகத்துக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில், குத்தாலத்தைச் சேர்ந்த ராஜா மகன் ராஜேஷ் என்ற இளைஞர் மீது  போக்சோ சட்டத்தின் கீழ் இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து குத்தாலம் பொலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை நாகை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ராஜேஷ் குற்றவாளி அல்ல என்று கடந்த 2017-ம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், திருச்சி மண்டல ஐ.ஜி உத்தரவுப்படி, இந்த வழக்கு 2022 ஆம் ஆண்டு  சென்னை உயர்நீதிமன்றத்தில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் போலீஸாரால்  மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு வழக்கின்  விசாரணை நிறைவடைந்த நிலையில், நாகை சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராஜேஷ்(29) குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. ஒரு சட்டப்பிரிவுக்கு 10, ஆண்டு கடுங்காவல் தண்டனை ரூ.2000 அபராதம் மற்றொரு சட்டப் பிரிவிற்கு ஏழாண்டும் ரூ 2000 அபராதமும் விதித்தது. தீர்ப்பில்  10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ர விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. தண்டனையை ஒரு சேர அனுபவிக்க வேண்டும் ரூ.4ஆயிரம் அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இதையடுத்து குத்தாலம் போலீஸார் ராஜேஷை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.  இந்த வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, திறம்பட நீதிமன்ற அலுவல் புரிந்த குத்தாலம் போலீஸாரை திருச்சி மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன், தஞ்சாவூர் டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலின் ஆகியோர் பாராட்டினர். மயிலாடுதுறை மாவட்டம் துவங்கி ஒரு வழக்கில் விடுதலையான நபரை போலீசாரே மேல்முறையீடு செய்து அதற்கு தண்டனை வாங்கி கொடுத்தது இதுவே முதல் வழக்காகும். அதுவும் பாதிக்கப்பட்ட சிறுமிக்காக போக்சோ வழக்கில் தங்களது திறமையை காட்டி தண்டனை பெற்றுத்தந்த குத்தாலம் போலீசாரை மயிலாடுதுறை சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.
Next Story