வெடிவிபத்தில் பலியானவர் குடும்பத்தினருக்கும் காயம் அடைந்தவர்களூக்கும் அரசு நிதி உதவி

X
. மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம், திருவாலங்காடு கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான வெடி உற்பத்தி மையத்தில் 24ஆம் தேதி பிற்பகல் சுமார் 01.00 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் திருவாவடுதுறை கிராமம், மேலப் புதுத்தெருவைச் சேர்ந்த கர்ணன் ( 45) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த லட்சுமணன் ( 45) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இவ்விபத்தில் காயமடைந்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் கலியபெருமாள் மற்றும் குமார் ஆகிய இருவருக்கும் சிறப்புச் சிகிச்சை அளிக்க தமிழக முதல்வர் உத்தரவிடுகிறார் இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்
Next Story

