சீத்தளா மாரியம்மன் ஆலய பால் குடி திருவிழா அழகு குத்தி நேர்த்திக்கடன்

குத்தாலம் அருகே மேலையூர் ஊராட்சியில் ஸ்ரீ சீதளா மாரியம்மன் கோவில் பால்குடம் திருவிழா; ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், 16 அடி நீளமுள்ள அலகு குத்தியும் கூண்டு காவடி எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மேலையூர் ஊராட்சி ஏரி மேட்டு தெருவில் உள்ள ஸ்ரீ சீதளா மாரியம்மன் கோவில் ஒன்பதாம் ஆண்டு பால்குடம் திருவிழா இன்று விமர்சையாக நடைபெற்றது. கடந்த 22 ஆம் தேதி விநாயகர் வழிபாடும், காப்பு கட்டுதலும் விழா தொடங்கி தினந்தோறும் சுவாமி புறப்பாடு செய்யப்பட்டு பால்குட திருவிழாவான இன்று மேலையூர் மாரியம்மன் கோவில் குளக்கரையில் இருந்து சிறப்பு பூஜைகள் செய்து காப்பு கட்டி விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், 16 அடி நீளமுள்ள அலகு குத்தியும், கூண்டு காவடி எடுத்தும் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். வழி நெடுகிலும் பொதுமக்கள் தீபாராதனை காட்டி வழிபாடு நடத்தினர். அலகு காவடி எடுத்த பக்தர்கள் சாமி வந்து சாலையில் ஆடியது காண்போரை பக்தி பரவசத்தில் ஆழ்தியது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த பாலை கொண்டு ஸ்ரீ சீதளா மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story