கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு பொள்ளாச்சி அருகே மலை உச்சியில் அமைத்துள்ள நந்த கோபால்சாமி‌ கோவிலில் கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் மற்றும் பக்தர்கள் சிறப்பு வழிபாடு.,

கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு பொள்ளாச்சி அருகே கடல் மட்டத்திலிருந்து 1800 அடி உயரத்தில் உச்சியில் அமைத்துள்ள நந்த கோபால்சாமி‌ கோவிலில் கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் மற்றும் பக்தர்கள் சிறப்பு வழிபாடு.,
கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு பொள்ளாச்சி அருகே கடல் மட்டத்திலிருந்து 1800 அடி உயரத்தில் உச்சியில் அமைத்துள்ள நந்த கோபால்சாமி‌ கோவிலில் கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் மற்றும் பக்தர்கள் சிறப்பு வழிபாடு., பொள்ளாச்சி.,ஆகஸ்ட்.,26  பொள்ளாச்சி அடுத்துள்ள அங்குலகுறிச்சி பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் சுமார் 1800 அடி மலை உச்சியில் அமைந்துள்ளது நந்த கோபால்சாமி கோவில்., புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ளதால் இந்தக் கோவிலுக்கு வனத்துறையினர் அனுமதி பெற்ற பிறகு கோவிலுக்கு செல்ல முடியும்., கோபால்சாமி கோவிலுக்கு செல்லும் வழி முழுவதும் வனப்பகுதியில் கரடு முரடான பாதைகள் வழியாக மலையேறி வந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம்., இந்தநிலையில் இன்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பிரசித்தி பெற்ற நந்த கோபால்சாமி மலையில் அமைந்துள்ள கோபால்சாமி மலையில் குழந்தைகள் ராதை மற்றும் கிருஷ்ணர் வேடமிட்டு, உறி அடித்து சிறப்பு வழிபாடு செய்தனர்., இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று நந்தகோபால்சாமி பாமா ருக்மணி தாயாரை வழிபாடு செய்தனர்., கடல் மட்டத்திலிருந்து 1800 அடி உயரம் கொண்ட மலைக்கு இன்று கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு பக்தர்கள் அதிக அளவில் வர உள்ளதால் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.,
Next Story