மாணிக்க பங்கு சந்தான கோபாலகிருஷ்ணன் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா
மயிலை மாவட்டம் தரங்கம்பாடி அருகே மாணிக்க பங்கு வில் உள்ள. இக்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு கிருஷ்ணருக்கு பால், தயிர், வெண்ணெய் உள்ளிட்ட வாசனை திரவவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பல வண்ண மலர்களால் கிருஷ்ணர் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். குழந்தைகள் கிருஷ்ணன் , ராதை, பலராமன், வாசுதேவன், யசோதை வேடங்கள் அணிந்து கோயிலுக்கு வந்திருந்தனர் .தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
Next Story




